தமிழில் அன்பு திரைப்படம் வாயிலாக அறிமுகமாகிய பாலா தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம். கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் வீரம் திரைப்படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக வந்தார். மலையாளத்தில் அவர் அதிக படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2016ம் வருடம் பாலாவுக்கு, பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து டாக்டரான எலிசபெத்தை, பாலா 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்துவிட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.
இவற்றிற்கு பாலா விளக்கமளித்தார். அதாவது, அவர் கூறியதாவது “இது நிஜமாகவே வேதனையளிக்கிறது. திருமணம் ஒரு முறை தோல்வியுற்றால், அதனை சிந்திக்காமல் இருக்கலாம். எனினும் 2வது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னை இந்நிலைமைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேச மாட்டேன். எலிசபெத் தன்னைவிட சிறந்தவர் ஆவார். தயவுசெய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக் கொள்கிறேன். இது எனது வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள் ஆகும். நான் எனக்காக தற்போது பேச முயற்சிக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.