Categories
டெக்னாலஜி

நீங்க ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ தீபாவளிக்கு முன்பே போங்க…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இப்போது பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பெரும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் வாயிலாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஆகவே மொபைல்கள், ஸ்மார்வாட்ச்கள் ஆகிய சாதனங்களை வாங்க இதுவே சிறந்தநேரம் என்பதால், அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய பண்டிகைக்காலங்கள் நிறைவடைந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்க இருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தியாவில் பண்டிகைகாலங்கள் நிறைவுபெற்றதும் ஸ்மார்ட் போன்களின் விலைகளை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீபாவளிக்குப் பின் தங்களின் பொருள்களின், குறிப்பாக குறைந்த விலையில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்களின், விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 5 -7 சதவீதம் வரையிலும் விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியானது, நிறுவனங்களின் உதிரி பாகங்களின் விலையை அதிகரித்துள்ளது. ஆகவே இதுவே விலையேற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாது இந்திய தயாரிப்பு நிறுவனங்களும் ரூபாயின் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதுவரை இந்தியாவிலுள்ள ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள், தொடர்ந்து வீழ்ச்சிக்கண்டு வரும் இந்திய ரூபாய்க்கு ஏற்ற அடிப்படையில் விலையை மாற்றாமல், ஒரே சீராக தான் வைத்திருந்தனர்.

எனினும் இந்த பண்டிகை காலத்திற்கு பின் விலையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் நிறுவனங்கள் இருக்கிறது. அத்துடன் இந்த விலை ஏற்றம் பட்ஜெட் போன்களில் (15- 20 ஆயிரம்) தான் செயல்படுத்தப்படும் எனவும் மிட்-பட்ஜெட் மற்றும் பிரீமியம் வகை செல்போன்களின் விலையை ஏற்ற வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது. அண்மையில் ஆப்பிள் அதன் பட்ஜெட் ஐபோன்-SE 2022 வகையின் விலையை ரூபாய்.6 ஆயிரம் வரை உயர்த்தி இருந்தது. Xiaomi மற்றும் Lava ஆகிய நிறுவனங்களின் சாதனங்களில் விலை ஏற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |