விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது வருகிறது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி தொடங்கியது. இந்த படப்பிடிப்பிற்கு மத்தியில் நடிகர் கமலஹாசன் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷூட்டிங்கிளும் கலந்து கொள்வாராம்.
அந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபல காமெடியன் தீனா போட்டியாளர்களை பிராங் கால் மூலம் கலாய்தார். அப்போது அவர் லோகேஷ் கனகராஜ் படங்களில் பணிபுரிந்த போது நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றி பேசியிருந்தார். அதில் கமல்ஹாசனிடம் லோகேஷ் சார் எப்போதும் உங்கள் பட காட்சிகளை காண்பித்து அதுபோல் நடிக்க சொல்வார் எனக் கூறினார். அதற்கு கமல் ‘நீங்க வேற’ அவர் என்னையவே அப்படித் தான் நடிக்க சொல்வார். என்னுடைய படத்தை காமிச்சு என்கிட்டயே அதே மாதிரி நடிக்க சொல்றார் என்ன காமெடியாக பேசினார். கமலஹாசன் பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் ‘விக்ரம்’ படத்தை ரிலீஸ் செய்வதாக படக்குழு திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.