Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க வேண்டாம்…. எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்….  அமைச்சர்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 250 இரண்டு நபர்களுக்கு 4.53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டங்களை தீபாவளி அன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இருளர் இன மக்களுக்கு எட்டாத கனியாக இருந்துவந்த வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை, இருளர் (ST) சாதி சான்றிதழ்கள், நரிக்குறவர் (MBC) சாதிச் சான்றிதழ்கள், போன்ற நலத்திட்டங்கள் உதவியால் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக முப்பாட்டன் காலத்தில் கிடைக்காத உதவி எல்லாம் இப்போது கிடைத்துள்ளது என கோவில் அன்னதானம் மறுப்பு மூலம் வைரலான  பெண் அஸ்வினி மேடையில் கலங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பெண்ணின் வீட்டுக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கு ஸ்டாலினை நேரில் செல்ல தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடகிழக்கு பருவ மழையால் இவை வழங்குவது காலதாமதமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |