ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்குமே மிக முக்கியமான ஆவணமாகும். இது பண பரிவர்த்தனை போன்ற முக்கிய விஷயங்களில் பங்கு வகிக்கிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல்வேறு ஆவணங்களில் ஆதார் கார்டு இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி மிக முக்கியமான ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் சில உள்ள தகவல்கள் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டியது மிக முக்கிய அவசியம். ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தம் செய்வதாக இருந்தால் அதற்கு செல்போன் எண் கட்டாயம் தேவைப்படும். எனவே அதை அப்டேட்ஸ் செய்திருக்க வேண்டும்.
இந்த ஆதார் கார்டு ஏராளமான விஷயங்களுக்கி பயன்படுகிறது. குறிப்பாக வருமான வரி செலுத்துவருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த பின்னர் அதை அப்டேட் செய்வதற்கு ஆதார் உதவுகிறது. எனவே ஆதார் கார்டு அப்டேட் ஆக வைத்திருக்கும் படி ஆதார் அமைப்பு தன்னுடைய வாடிக்கையாளர்களை வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து தன்னுடைய twitter பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஆதார் தொடர்பான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு மற்றும் அப்டே செய்து கொள்ளலாம் எனவும் ஆன்லைன் அப்டேட்டுக்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல ஆதார் சேவை மையங்களில் அப்டேட் செய்ய ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.