Categories
மாநில செய்திகள்

“நீங்க ரொம்பவே லேட்”…. உதயநிதிக்கு அமைச்சர் பதவி… விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி….!!!!

சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.  அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருக்க வேண்டும். கடந்த தேர்தலிலேயே தெரியும் உதயநிதி திறமை மிக்க  இளைஞர் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர்.

மேலும் “சட்டமன்ற உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்று தான் முதல்வர் காத்திருந்தார் போல தெரிகிறது”. அவருக்கு எந்த துறை கொடுப்பது என்பது குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு வெளியிடுவார். உதயநிதி ஸ்டாலின் மேலும் பல்வேறு பொறுப்புகளையும் பெறுவார். அமைச்சர் பதவியை அவருக்கு கொடுக்க வேண்டாம் என்று இங்கு யாரும் கூறவில்லை. அவருக்கு தாமதமாக கொடுத்திருக்கின்றீர்கள் என தான் பலபேரும் கூறுகின்றனர். இந்நிலையில் வாரிசு அரசியலில் இருக்கக் கூடாது என்று ஏதேனும் இருக்கிறதா? வாரிசு அரசியல் என்பது வழக்கமான ஒன்றுதான்.  மக்களுக்கு இதெல்லாம் தெரியும். வாரிசு அரசியல் அனைத்து இடங்களிலும், அனைத்து கட்சிகளிலும் இருப்பது தான். அதனால் அது ஒன்றும் தவறில்லை. மேலும் “உதயநிதி துணை முதல்வராக விரைவில் எதிர்பார்க்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |