Categories
Tech டெக்னாலஜி

நீங்க யூடியூப் அப்டேட் பற்றி சீக்கிரமா தெரிஞ்சுக்கணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்…..!!!!!

உலகில் உள்ள அனைவரும் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப், தற்போது வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு வழங்கியது. யூடியூப் மூலம்  பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் தினசரி அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. வருமான வாய்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், கண்டிப்பாக அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

அதாவது யூடியூப் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாறவேண்டும்.  அவ்வாறு நீங்கள் மாறிவிட்டீர்கள் எனில், யூடியூப் கொண்டுவரும் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளலாம். யூடியூப் நிறுவனம், தாங்கள் கொண்டு வரும் அப்டேட்டுகளை ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொடுக்கும். அவற்றில் கிடைக்கும் நிறைகுறைகளைக் கொண்டு, அப்டேட்டுகளை மேம்படுத்தி அதன் பிறகே அனைவருக்குமான அணுகலைக் கொடுக்கும். இதில் பல்வேறு விஷேஷ அம்சங்கள் இருக்கிறது. யூடியூப்பில் நீங்கள் மாஸ்டராக இருக்கவேண்டும் எனில், ப்ரீமியம் உறுப்பினராக மாறுவது சிறந்தது. சந்தாவுக்கு ஏற்றவாறு நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டும்.

Categories

Tech |