மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு குரங்கு மதுபான கடையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.
மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோவில் குரங்கு முதலில் மதுபானக் கடைக்குள் நுழைந்து ஒரு பாட்டிலை எடுத்து பாட்டிலின் மூடியை வாயால் திறந்து, பின்னர் மெதுவாகக் குடிக்க தொடங்குகிறது. இதை பார்த்த மது கடைக்காரர் குரங்கிற்கு ஒரு பிஸ்கட்டை வழங்குகிறார். அதனை வாங்க மறுத்த குரங்கு, மதுவை குடிப்பதிலேயே குறியாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
https://twitter.com/smaheshwari523/status/1415340792311279617
இதுகுறித்து அங்கிருந்த சிலர் தெரிவித்ததாவது: குரங்கு சில நாட்களுக்கு முன்பு இங்கு வந்திருந்தபோது கீழே கிடந்த காலியான மது பாட்டில்களில் இருந்த சிறிய அளவு மது பானங்களை குடிக்க தொடங்கியது. இதன் சுவை அதற்கு மிகவும் பிடித்து விட்ட காரணத்தினால் மீண்டும் மீண்டும் அங்கு வந்து மது பாட்டில்களில் உள்ள மதுவை குடித்து வருகிறது. இதையடுத்து கடையின் ஊழியர்கள் அடுத்த முறை குரங்கு இங்கு வந்தால் அதனை விரட்டியடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.