Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“நீங்க போட்டா மட்டும் போதும்”, நாங்களே வந்து வாங்கிடுத்தோம்…. ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்..

ராணிப்பேட்டையில் தேர்தல் குழு தபால் ஓட்டினை சேகரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டுள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு ஊனமுற்றவர்களும், முதியோர்களும் வீட்டிலிருந்தபடியே தங்களது ஓட்டினை பதிவு செய்ய தேர்தல் குழு ஏற்பாடு செய்தனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் ஊனமுற்றோர்களும் மூத்தகுடிமக்களும் மொத்தமாக சுமார் 684 பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களது வாக்கினை சுலபமாக அளிக்கும் விதமாக தேர்தல் குழு தபால் ஓட்டினை வீட்டிலேயே வழங்கியுள்ளார்கள். இந்நிலையில் அனைத்து தபால் ஓட்டுகளையும் சேகரிக்க மொத்தமாக 12 தேர்தல் குழுக்கள் நியமித்தனர். இத்தேர்தல் குழுக்கள் ஓட்டினை சேகரிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் கிளான்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |