திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தினம் தோறும் பெருமாளை தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப ஆன்லைன் மற்றும் இலவச டோக்கன்கள் மூலம் பெருமாளை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் சுலபமான முறையில் தரிசிக்க வருகின்ற 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டின் விலை 300 ரூபாயாகும். எனவே பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட நாளில் வந்து பெருமாளை தரிசனம் செய்யலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.