திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நமது திருப்பதியில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்திர தீபலங்காரம் ஆகிய சேவைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும்.
இந்த சேவையில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கான டிக்கெட் வெளியிடப்படுகிறது. இந்த டிக்கெட்டை பக்தர்கள் சேவை நடைபெறுவதற்கு முன்தினம் பதிவு செய்யலாம். இந்நிலையில் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் எலக்ட்ரானிக் டிப் பதிவுகள் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திங்கள்கிழமை காலை வெளியிடப்படுகிறது.எனவே பக்தர்கள் புதன்கிழமை வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.