தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழக்த்திற்கு வந்துள்ள மத்திய குழுவினர் தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க மேற்கொண்டு வரக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மை துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத் துறைச் செயலாளர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கொரோனா எது போன்ற பாதிப்பாக இருக்கிறது.
முதலில் இந்த பாதிப்புகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது தொடர்ச்சியாக அதிகரித்து வரக்கூடிய காரணத்தினால், எது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுவருகின்றது ? என விவாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன ? என்பது குறித்தும் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் மத்திய குழுவினர் கேட்டறிந்ததாக தெரிகின்றது.
மத்திய குழுவினர் பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடி இருக்கிறார்கள். இங்கு இருக்கக்கூடிய சித்த மருத்தும் எந்த அளவு உதவுகின்றன ? குறிப்பாக கபசுரக் குடிநீர் போன்ற மருத்துவங்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது ? அதே போல இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பது எப்படி ? கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக குணமடைந்து செல்லக்கூடியது தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறது போன்ற விஷயங்களெல்லாம் பேசியிருக்கிறார்கள். இருந்த போதிலும் கூட தொடர்ச்சியாக நோய் தொற்று அதிகமாக இருக்கக்கூடிய காரணத்தினால் அதை அரசு தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய குழு சொல்லியிருக்கிறது.