Categories
அரசியல்

நீங்க கூகுள் பே யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பணப்பரிவர்த்தனை செய்ய கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் ஆப்களை தங்கள் போன்களில் வைத்துள்ளனர். இதனால் மக்களின் சிரமும் குறைந்துள்ளது. ஏனென்றால் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே கையில் உள்ள ஸ்மார்ட் போனை வைத்து மொபைல் செயலி மூலமாக பணம் அனுப்பவும் பெறவும் நம்மால் முடியும்.

அதுமட்டுமல்லாமல் நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி ஆப் மூலமாக அதற்கு பணம் செலுத்தலாம். மேலும் மொபைல் ரீசார்ஜ், டிவி ரீசார்ஜ்,கரண்ட் பில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் இந்த செயலிகள் மூலமாக செய்து முடிக்கலாம். முதன் முதலாக இந்த செயலியை இன்ஸ்டால் செய்து நாம் பயன்படுத்தும் போது நிறைய பரிசுகள் நமக்கு கிடைத்திருக்கும். 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை சிலருக்கு ரிவார்டுகள் கிடைக்கலாம்.

இது பயனர்களை ஈர்க்கும் நோக்கத்திலும் அவர்களை ஊக்குவிக்கவும் வழங்கப்பட்ட சலுகைகள். ஆனால் இப்போது இந்த அளவிற்கு உங்களுக்கு பணம் கிடைப்பது சிரமம்தான். இப்போது யாருக்கும் பணம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு ஐந்து ரூபாய் சொற்பமாக கிடைக்கிறது. அதனால் இந்த மொபைல் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் என்று சிலர் நினைக்கின்றனர். ரிவார்டு கிடைக்காவிட்டாலும் பணம் அனுப்ப,ரீசார்ஜ் செய்ய மற்றும் ஷாப்பிங் செய்ய இருந்தால் போதும் என்று பயனர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |