Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்க குணமடைந்தால் போதும் ரஜினி அங்கிள்… அரசியலுக்கு வந்து கஷ்டப்படாதீங்க… வனிதா போட்ட ட்வீட்…!!!

‘ரஜினிகாந்த் அங்கிள் குணமடைந்தால் போதும் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட தேவையில்லை’ என நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது . இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது . இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டு இருப்பதால் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சீக்கிரம் குணமாகி விட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில் ‘ரஜினிகாந்த் அங்கிள் நீங்கள் விரைவாக குணமடைந்து பழையபடி கம்பீரமாக எழுந்து வர வேண்டும் . இந்த வருடம் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டும் உள்ள நிலையில் எந்த பிரச்சனையுமின்றி  குணமடைந்து வரவேண்டும் . மேலும் நீங்கள்  உடல்நலத்துடன் இருந்தாலே போதும் அரசியலுக்கு வந்து கஷ்டப்பட தேவையில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |