மண்டல கூட்டுறவு சங்கத்தின் இணைப்பதிவாளர் ஜினு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் தள்ளுபடி ஆணையை வெளியிட்டார். இதன்படி நமது மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய நிறுவனங்களில் 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த மூன்று லட்ச்த்து 939 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 97 கோடி ரூபாய் மதிப்பில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனவே மகளிர் சுய உதவி குழுவின் உறுப்பினர்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அலைபேசி எண் ஆகியவற்றை ஒரு வாரத்திற்குள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு சென்று வழங்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.