தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது என எச்.ராஜா கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சரின் கூட்டத்தில் பரவாத கொரோனா? வேல் யாத்திரை பரவி விடுமா? எதிர்க்கட்சியின் மிரட்டலுக்கு அடிபணிந்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.