Categories
உலகசெய்திகள்

நீங்க என்ன நினைக்கிறீங்களோ…? அது தான் இது…. மைக்கை பாதுகாக்க இதுவா…? வைரலாகும் video…!!!!

அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டனர். மின்சாரம் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் புயல் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க நேரடியாக சென்ற அமெரிக்க செய்தி நிறுவனர் கைலா காலர் செய்த செயலானது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது மழை நீர் மற்றும் புயல் காற்றிலிருந்து மைக்கை பாதுகாத்துக் கொள்ள கையில் இருந்த ஆணுறையை கொண்டு மைக்கில் மாட்டி உள்ளார். இது குறித்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ? அதுதான் இது. ஆணுறை இது என்னுடைய மைக்கை மழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதோடு இணையவாசிகள் இது தொடர்பாக அதிகமான மீம்ஸ் களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |