Categories
அரசியல்

நீங்க என்ன செஞ்சீங்க ? வெள்ளை அறிக்கை வெளியிடுங்க… பாஜகவை சீண்டும் சீமான் ….!!

பாஜக அரசை வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாடு அரசு என்ன செய்திருக்கிறது என்று வெள்ளை அறிக்கை கொடுத்தது என பாஜக தலைவர்  அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு,  இந்திய ஒன்றிய அரசு என்ன செய்திருக்கின்றது. இந்த 7 1/2 ஆண்டுகளிலேயே என்ன செய்திருக்கிறது. குறிப்பா பாரதிய ஜனதா கட்சி…  காங்கிரஸ் கட்சியை விட்ருவோம்.

தொடர்ச்சியாக இப்போது 7 1/2 ஆண்டுகள் ஆக போகிறது நீங்க என்ன செய்திர்கள் விவசாயிகளுக்குஎன்ன செய்தீர்கள் அதற்க்கு  நீங்கள் முதலில் வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். சில இடங்களில் நேரடியாக நாம் தமிழருக்கும் திமுகவிற்கும் மோதல் வருகிறது. ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி  இடங்களிலே நேரடியாக மோதுகிறோம். அப்போ அந்த இடங்களிலே வந்து எங்க கிட்டே  பேரம் பேசுகிறார்கள்.

நீங்கள் விலகி விடுங்கள் உங்களுக்கு இவ்வளவு கொடுக்கிறோம்.  எங்க பிள்ளைகள் ரொம்ப அடித்தட்டில் இருந்து வருகின்ற பிள்ளைகள், அன்றாடம் காட்சிகள். உனக்கு 10லட்சம் தாரேன், கார் வாங்கி தாரேன் என்றால் எல்லாருமே யோசிப்பார்கள். அப்புறம் வந்து உயிரோட இருக்க மாட்ட, இந்த மாதிரி மிரட்டல்கள் எல்லாம் இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.

Categories

Tech |