ஊரடங்கு உத்தரவிற்கு மத்தியிலும் வலிமை திரைபடத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் போனி கபூரை அஜித் ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை படம் ஜனவரி 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பல படங்களின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. வலிமையின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்க படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் வலிமையை திட்டமிட்டபடி ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.
தியேட்டர்களில் இருக்கை குறைப்பு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கும்போதிலும் வலிமையை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர் போனி கபூரை தான் அஜித் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு நீங்கள் ரொம்ப நல்லவர்னு தெரியாமல் போய்விட்டதே ஜி என்று அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.