Categories
சினிமா

நீங்க இன்னும் அத விடவே இல்லையா….. “இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்”….. செம கலாய் பார்த்திபன்….!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக் குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றி பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வருகிறார்கள். அதன்படி நேற்று நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்யா மற்றும் சரத்குமார் உடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ஐஸ்வர்யா ராய் கவிதை வடிவில் பாராட்டியிருந்தார். இந்த புகைப்படத்திற்கு கீழே ஒரு ரசிகர் சார் எனக்கு ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த பார்த்திபன் அந்த ரசிகரை கலாய்க்கும் வகையில் “சின்ன ஹாய்” என்று பதிவிட்டு இருந்தார். இதனை ஒரு மீம் பக்கத்தில் குறிப்பிட்டு இந்த புகைப்படத்துடன் ஒரு மீம் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மீம் புகைப்படத்தை இணைத்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அதில், “மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் வைரல் ஆவது நல்லது! இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |