Categories
தேசிய செய்திகள்

நீங்கள் விவசாயிகளை அவமதிக்கிறீர்களா?… எதிர்க்கட்சிக்கு கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி…!!!

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் அனைவரும் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தில் மிகப்பெரிய ஆறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து அவர் பேசும்போது, “பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் குறைந்தபட்ச ஆதார விலையை கட்டாயம் அமல்படுத்துவார்கள் என்று கூறி வந்தார்கள்.

ஆனால் அவர்கள் அதனை ஒருபோதும் செய்யவில்லை. இந்த சட்டங்கள் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இவை விவசாய சட்டங்களுக்கு எதிரான செயல்படும் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதாரமானவை. அதன் மூலம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்றன”என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |