Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நீங்கள் வில்லனாக இருப்பதால் தான் நான் நாயகியாக இருக்கிறேன்’… நடிகை கங்கனா வெளியிட்ட வீடியோ…!!

ஹைதராபாத்தில் நடைபெறும் தலைவி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகை கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ திரைப்படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து கங்கனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மும்பை பாந்த்ராவின் பாலிஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியை சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது எனக் கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

இதையடுத்து நடிகை கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவது சரியாக இருக்கும் என தீர்ப்பளித்துள்ளது. இதனால் நடிகை கங்கனா, ஒரு தனிநபர் அரசாங்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றால் அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி . எனக்கு ஊக்கம் அளித்தவர்களுக்கு நன்றி. இடிந்து போன என் கனவுகளை கண்டு சிரித்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் நீங்கள் வில்லனாக இருப்பதால் தான் நான் நாயகியாக இருக்கிறேன் என்று வீடியோவில் கூறியுள்ளார்.

Categories

Tech |