பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டது. இதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்தனர். இதனால் அனைவருடைய வீடுகளிலும் கேஸ் இணைப்பு பெறப்பட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலிண்டர் முடிந்தவுடன் மக்கள் புக் செய்தால் ஒரு சில டீலர்களிடமிருந்து சிலிண்டர் வருவதற்கு வாரக்கணக்கில் ஆகிவிடுகின்றது. இதனால் அந்த சமயங்களில் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சினையை போக்குவதற்காக தற்போது புதிய வசதி ஒன்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பிய நேரத்தில் சிலிண்டர் உங்கள் வீடு தேடி வருவதற்கு சிலிண்டர் புக்கிங் செய்யும் போது வாடிக்கையாளர்கள் சில ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். அதை தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தினால் குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.
எடுத்துக்காட்டாக புதன்கிழமை காலை 11 மணி முதல் 2 மணிக்குள் வேண்டுமென்று தேர்வு செய்தால் அதன்படி உங்களுக்கு டெலிவரி கொடுக்கப்படும். திங்கள் – ஞாயிறு வரை – காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை. காலை 8 11 மணி முதல் மதியம் 3 மணி வரை. மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை. திங்கள் – வெள்ளி வரை – மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை. நீங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தைப் பொறுத்து கட்டணம் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் வசூலிக்கப்படும்.