புதிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், அரசு ஊழியர் அல்லாதவர்கள், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தங்களுக்கான ஓய்வூதியத்தையும் திட்டமிடலாம். நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .150 என்ற அளவில் சேமித்து NPS-ல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ .1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது. என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு 25 வயது என்று வைத்துக் கொண்டால், நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.4,500 என்ற அளவில், அதாவது ஒரு நாளைக்கு ரூ.150 என்ற அளவில் என்.பி.எஸ்., முதலீடு செய்தால், 60 வயதில் ஓய்வு பெறும் போது, கோடீஸ்வரராக இருப்பீர்கள், அதாவது நீங்கள் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், குறைந்தது 8% என்ற விகிதத்தில் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். ஓய்வு பெறும்போது, உங்கள் மொத்த ஓய்வூதிய சொத்து ரூ.1 கோடியாக இருக்கும்.
நீங்கள் இந்த பணத்தை ஒரே நேரத்தில் திரும்பப் பெற முடியாது. நீங்கள் அதில் 60 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை நீங்கள் வருடாந்திர முதலீட்டு திட்டத்தில் வைக்க வேண்டும், அதில் இருந்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். உங்கள் பணத்தில் 40% வருடாந்திர முதலீட்டில் வைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் மொத்த தொகையில் இருந்து ரூ.61.54 லட்சத்தை திரும்பப் பெற முடியும் மற்றும் வட்டி 8% என்று கருதினால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ .27,353 ஓய்வூதியம் கிடைக்கும்.
உங்களது 25 வயதில் இங்கே முதலீடு செய்யத் தொடங்கினால், உங்கள் ஓய்வூதிய நிதி மிகப் பெரிய அளவில் சேமிக்கப்படுகிறது. ஓய்வூதியத்தின் அளவு ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்யும் தொகை, எந்த வயதில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினீர்கள் மற்றும் நீங்கள் பெறும் வருவாயைப் பொறுத்தது. ஒவ்வொரு நபருக்கு இந்த தொகை வித்தியாசப்படலாம்.