ரசிகரின் கேள்விக்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை பதில் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் . அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் மீனாவுக்கு அம்மாவாக நடித்து வரும் ஸ்ரீவித்யாவிடம் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நீங்கள் ஏன் வருவதில்லை? என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்ரீவித்யா ‘இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் ?. இந்த சீரியலின் கதையாசிரியரிடம் கேளுங்கள்’ என பதிலளித்துள்ளார்.