Categories
மாநில செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா….. அமைச்சர் அன்பில் மகேஷ் மீட்டிங்…. தூங்கி வழிந்த அதிகாரிகள்….!!!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான கல்வித்துறை ஆய்வுக்கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் முதன்மை பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆணையர், மாநிலத் திட்ட இயக்குனர் மற்றும் திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது மேடையில் அமைச்சர் அருகில் அமர்ந்து கொண்டிருந்த மாநில திட்ட இயக்குனர் சுதன் ஐஏஎஸ் கண்ணையர்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். இதனை கவனித்து அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரியை எழுப்பிய போது உறங்கியபடி இருந்துள்ளார். இதனையடுத்து உதவி செய்திதுறை அதிகாரி, சுதன் ஐஏஎஸ் அதிகாரி எழுப்பிவிட்டார். அமைச்சர் ஆலோசனை வழங்கிய போது பல கல்வித்துறை அதிகாரிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். மேலும் சில அதிகாரிகள் தூக்கத்தை தவிர்க்க போனில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |