Categories
மாநில செய்திகள்

நீங்களும் மனுஷங்கதான்… சமத்துவதை நிலை நிறுத்திய திமுக அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோவிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோவில் ஊழியர்கள் தரைகுறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப்பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக நேற்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தலசயனப் பெருமாள் கோவிலில் நம்முடைய அன்பு சகோதரி ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு முகநூல் பதிவை வெளியிட்டிருந்தார். அந்த முகநூல் பதிவில் சாப்பாட்டிற்கு வந்தபோது முதல் பந்தியில் அவரை உட்கார வைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு கொண்டார்.

இது மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், நானும் இந்து அறநிலையத்துறை ஆணையாளரும், உடனடியாக இந்த மாவட்டத்தினுடைய இணை ஆணையர் ஜெயராமன் அவர்களை தொடர்புகொண்டு இந்த தங்கையை கண்டுபிடித்து வயிறார உணவை கொடுத்து மீண்டும் ஒருமுறை அவரே முகநூல் பதிவில் என் குறைகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்டது என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அதை தொடர்ந்து மாண்புமிகு முதல்வரின் வழிகாட்டுதலில் இந்த திருக்கோயிலுக்கு நானும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையாளரும் சமபந்தி போஜனத்தில் அவர்களோடு உட்கார்ந்து நாங்களும் உணவு அருந்தினோம். அதுமட்டுமில்லாமல் தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு புத்தாடைகளும் வழங்க இருக்கின்றோம்.

மேலும் அவர்களுடைய கோரிக்கை ஒரு குடும்பமாக இருந்த நாங்கள் இன்று 3,4 குடும்பங்களாக இருக்கின்றோம். அதனால் எங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அதே இடத்தில்தான் நாங்கள் 3,4 குடும்பங்களோடு குடியிருந்து வருகின்றோம். எங்களுக்கு கூடுதலாக வீடுகள் வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தார்கள்.

மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று இந்த தொகுதியினுடைய மாவட்ட அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களோடு கலந்தாலோசித்து நிச்சயம் அவர்களுடைய குறைகளை களைவதற்கு மாண்புமிகு முதல்வர் முயற்சிப்பார். மேலும் அவர்கள் வசிக்கின்ற பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் இருக்கிறது என்று ககூறியுள்ளார். அந்த குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து வைக்கின்ற வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |