Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“நீங்களும் கலந்து கொள்ளலாம்” நடைபெறும் லட்சார்ச்சனை விழா …. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

குருபகவான் கோவிலில் 2-ஆம்  கட்ட லட்சார்ச்சனை நாளை தொடங்குகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 14-ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு முதற்கட்ட லட்சார்ச்சனை விழா கடந்த 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதனையடுத்து நாளை முதல் வருகின்ற வெள்ளிக்கிழமை வரை 2-ஆம்  கட்ட லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இந்த லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடைபெறுகிறது. இதில்  மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் கலந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |