நிவர் புயலானது சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் காரைக்கால், கடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் படிப்படியாக மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை அருகே 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கு திசையில் 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் புதுவை அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.