நிவர் புயல் கரையை கடக்கும் போது பார்க்க விரும்புவர்களுக்கு வானிலை ஆய்வு மையத்தால் இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மதியம் கரையை கடக்க உள்ள நிலையில், இந்த நிகழ்வை காண ஆசைப்படுபவர்கலுக்காக சென்னை வானிலை மையம் ஒரு சில ஏற்பாடுகளை செய்துள்ளது. நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த புயலானது நாளை மதியம் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த நிவர் புயலின் எதிரொலியாக இன்று மூன்று மாவட்டங்களிலும், நாளை எட்டு மாவட்டங்களிலும் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் கரையை கடக்கும் போது பார்க்க விரும்புபவர்கள் windytv.com என்ற லிங்கை பயன்படுத்தி புயலின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ளலாம். மேலும் புயல் கரையை கடப்பதையும் இந்த லிங்க் மூலமாக பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை புயல் கரையை கடந்துசெல்லும் மற்றும் மையம் கொண்டிருக்கும் பகுதியானது காட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.