நிவர் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கப்படவுள்ளது.
தமிழகத்தில் நிவர் புயலின் தாக்கம் பெரும் சேதம் ஏற்படுத்தவில்லை என்றாலும் அதிக மழையை கொடுத்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினத்தில் இருந்த பல்வேறு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. குறிப்பாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நிலைமை சீராவதால் நாளை முதல் மீண்டும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்லூரிகளில் அரசு கோட்டா இடங்கள் என 405 – ல் 399 இடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.