நில பிரச்சனையில் அண்ணன் குடும்பத்தை தம்பிகள் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்தூர் அருகே உள்ள கொக்காரப்பட்டியில் வசித்து வருபவர் முருகன் (வயது 57). இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். முருகனுக்கு இரண்டு தம்பிகள் உள்ள நிலையில் சில நாட்களாக இவர்களிடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி நில பிரச்சனை முற்றியதால் முருகன் மற்றும் அவரது மனைவி மகனை தம்பிகள் இருவரும் கத்தியால் குத்தி உள்ளனர். இதுகுறித்து காயமடைந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.