Categories
மாநில செய்திகள்

நில ஆக்கிரமிப்பை அரசு தொடர்ந்து அனுமதித்தால்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக  சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. 9 நபர்கள் மீது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, வெள்ளாளகுண்டம் கிராமத்தில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் உருவாக்கி அரசு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளதாக எஸ். ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த விசாரணையின் போது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அரசு நில ஆக்கிரமிப்பை அரசு தொடர்ந்து அனுமதித்தால் பேராசிரியர்களும், குற்றவாளிகளும், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று எச்சரித்துள்ளனர்.

மேலும் தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமித்த அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியத்துடன் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழித்து செயல்படுவதாக நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து வாடகைதாரர்கள் காலி செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு இழப்பை வசூலிக்கவும், அரசுக்கு நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளது.

Categories

Tech |