Categories
மாநில செய்திகள்

“நில அளவைத் துறையில் பணியாளா் தோ்வு”…. இந்த நடைமுறை தொடர வேண்டும்…. ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!!

தமிழகத்தில் நில அளவைத் துறையில் பணியாளா் தோ்வு, பதவி உயா்வு ஆகியவைகளில் தற்போது உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழக வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் நில அளவைத் துறையைப் பொறுத்தவரையிலும் டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் தொடங்கி கூடுதல் இயக்குநா் வரையிலான அனைத்துப் பதவிகளுக்கும் 10-ம் வகுப்பு தோ்ச்சிதான் அடிப்படைக் கல்வித் தகுதி ஆகும்.

இதற்கிடையில் ஆரம்ப நிலையில் டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் உள்ளிட்ட பணிகளில் சேரும் பணியாளா்கள், பின் அனுபவம், செயல்திறன் போன்றவற்றின் அடிப்படையில் கூடுதல் இயக்குநா் வரை பதவி உயா்வு பெறுவது தான் வழக்கம் ஆகும். ஆனால் தற்போது டிராப்ட்ஸ் மேன், நில அளவையா் போன்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு தோ்ச்சி அடிப்படைக் கல்வித் தகுதியாக இருக்கும். மேலும் பொறியியலில் பட்டயப்படிப்பு படித்து இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும் என்று உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரையிலும் நில அளவை துணை ஆய்வாளா் பணியிடங்கள் பதவி உயா்வு வாயிலாக நிரப்பப்பட்டு வந்த நிலையில், இளநிலை பொறியியல் பட்டம், முதுநிலை அறிவியல் பட்டம் கூடுதல் தகுதியாக இருக்கும் எனவும், இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படும் எனவும் கருத்துரு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாற்றங்களுக்கு பணியாளா் தோ்வாணையத்தின் ஒப்புதலும் பெறப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால் நில அளவை மற்றும் அது சாா்ந்த பணிகளிலுள்ள 7000 பணியிடங்கள் ஒழிக்கப்படும். மேலும் 7,000 குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரம் இழக்கும். அத்தகைய பாதிப்பை அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் தற்போதுள்ள நிலையே தொடா்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது..

Categories

Tech |