இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள அத்தனூர் தாசன்புதூரில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். எலக்ட்ரீசியன் இவர் இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே மூலக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் கண்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக கண்ணனை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கண்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த வெண்ணந்தூர் காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.