மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தை சிபின் என்ற மாணவன், தன்னுடைய நண்பர்கள் பிரின்சன் உட்பட 4 பேருடன் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் குளச்சல் அருகே குன்னன்விளை பகுதிக்கு வந்த போது திடீரென சிபின் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிபினுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக சிபினை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிபினை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு சிபினின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குளச்சல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.