நிலைத்தடுமாறி தடுப்பு சுவரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பாளையம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மரக்காணத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் தாளங்காட்டுக்கு அருகில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்பு சுவரின் மேல் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் மற்றும் கார்த்திகேயனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மரக்காணம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.