Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள சணப்பிரட்டி பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கம்பட்டி- மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதால் சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |