Categories
தேசிய செய்திகள்

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது…. காரணம் இதுதான்….!!

சந்திரனுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை 2025 ஆம் ஆண்டிற்கு நாசா ஒத்திவைத்துள்ளது.

நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களுக்காக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இத்திட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது.

நிலவுக்கு செல்வதற்கான விண்கலத்தை தயாரிக்க எலன் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடர்ந்து வாதிட்டு வருவதால் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Categories

Tech |