Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நிலத்தால் ஏற்பட்ட முன்விரோதம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில்  செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு செல்வம் தனது மனைவியுடன் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராஜ்குமார் அவரது  நண்பர் கோதண்டம், சந்திரன் ஆகிய 3 பேர் செல்வத்தை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்ற நீதிபதி 3  பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும்  விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |