Categories
உலக செய்திகள்

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து…. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. துரித நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

துருக்கி நாட்டில் அமஸ்ரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது இந்த வெடி விபத்தால் ஒரு பகுதி முழுவதும் தீயினால் பற்றி எரிந்தது. மேலும் மற்றொரு பகுதி இடிந்து விழுந்து நாசமானது. இந்த இடிப்பாடுகளுக்குள் அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 41-க்கும் மேற்பட்டோரை பிணமாகவும் 11 பேர் படுகாயங்களுடனும் மீட்பு குழுவினர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இடுபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

Categories

Tech |