Categories
தேசிய செய்திகள்

நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு 80 பேரின் கதி என்ன….? பதற வைக்கும் சம்பவம்…!!

மியான்மரில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 70 பேர் மாயமாகி உள்ளனர்.

வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றும் 70 க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு நேரப்படி சுமார் 4 மணி அளவில் பச்சை மரகதக் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த பகுதிக்கு செல்ல உள்ளூர்வாசிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனினும் கொரோனாவால் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் வேலையின்மை காரணமாக இந்த பகுதிக்கு அரசின் உத்தரவை மீறி பலர் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மியான்மரில் உள்ள கச்சின் மாநிலத்தின் பகந்த் (Hpakant) பகுதியில் உள்ள அந்த சுரங்கத்தில் விதிமுறைகளை மீறி பலர் பச்சை மரகதக் கற்களை வெட்டி எடுக்கும் தொழிலுக்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் காணாமல்போனவர்களை சுமார் 200க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் தேடி வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் பயன்படுத்தி அருகில் உள்ள குளங்களில் இறந்தவர்களின் உடல்களை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |