பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் பகுதியில் பச்சாயி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பச்சாயி அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்திற்கு நிலக்கடலை பறிப்பதற்காக சென்றபோது பாம்பு அவரை கடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பச்சாயியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பச்சாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.