Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற அரசு பஸ்…. வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கூடலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் முக்கிய இடங்களில் மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகின்றன. இதனால் 10 கிலோமீட்டர் தூரம் பள்ளி கல்லூரிக்கு நடந்து சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கல்லூரியில் வகுப்பு முடிந்து மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அரசு பஸ் ஒன்று பந்தலூருக்கு பயணிகள் ஏற்றி வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பஸ் நிற்காமல் சென்று விட்டது. இதனால் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பஸ்ஸை பின்தொடர்ந்து சென்று டிரைவர் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாணவர்களிடம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நிறுத்தவில்லை என விளக்கம் கூறியுள்ளனர். இதனை ஏற்காத மாணவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கூடலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |