இத்தாலிக்கு எதிரான யூரோ கால்பந்து இறுதியாட்டத்தில், பெனால்டி தவறவிட்ட இங்கிலாந்தின் ராஸ் போர்ட், சான்ச்சோ, சாகா மீது ரசிகர்கள் கடுமையான நிறவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும், அவர்களது இனத்தை பற்றி தவறாக பேசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இனவெறியை தூண்டும் வகையில் கடுமையான பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து கேப்டன் கேன் “தைரியமாக பெனால்டி எடுக்க முன்வந்த வீரர்களுக்கு உங்கள் ஆதரவுதான் வேண்டும். வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் இங்கிலாந்து ரசிகர்கள் எங்களுக்கும் தேவை இல்லை” என்று கூறியுள்ளார்.