Categories
தேசிய செய்திகள்

நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்துனாங்க!… என் வாழ்க்கையே போயிட்டு…. பெண் பரபரப்பு புகார்….!!!!

கேரளா பத்தனம்திட்டாவில் அண்மையில் தர்மபுரியை சேர்ந்த பெண் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு கேரளாவில் போலி மந்திரவாதிகள் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் மாமியார், கணவர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் கொடுத்து இருக்கிறார். அதாவது கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ஷாலு சத்தியபாபுவுக்கு (36) சென்ற 2016ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

அதன்பின் ஷாலு சத்திய பாபு தன் மனைவி குறித்து ஒரு மந்திரவாதியிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அந்த மந்திரவாதி ஷாலு சத்தியபாபு மனைவிக்கு, பேய் பிடித்து இருப்பதாகவும், நிர்வாண பூஜை செய்தால் அந்த பேய் விலகும் எனவும் கூறியுள்ளார். இதனை கேட்டு ஷாலு சத்தியபாபு தன் மனைவிக்கு சென்ற 2017ம் வருடம் பிப்ரவரி மாதம் பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்நிலையில் ஆடைகளை எல்லாம் மாற்றி விட்டு நிர்வாணமாக வந்து பூஜையில் அமருமாறு மந்திரவாதியும், கணவர் ஷாலுசத்திய பாபுவும், அவர் குடும்பத்தாரும் அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் தன் தாய் வீட்டுற்க்கு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து அப்பெண் ஆற்றுங்கள் போலீசில் அப்போது புகார் அளித்தார்.

அப்புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை மற்றும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதன்பின் விவாகரத்து கேட்டு அப்பெண் கணவர் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கேரளத்தில் 2 பெண்கள் மந்திரவாத பூஜையில் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியாகி பரபரப்பான நிலையில், தற்போது அப்பெண் தனக்கு ஏற்பட்ட நிலை பற்றி சடையமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதாவது, கணவர், மாமியார் மற்றும் மந்திரவாதிகள் 2 பேர் தன்னை நிர்வாண பூஜைக்கு கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு மறுத்ததால் வாழ்க்கையை இழந்து இருப்பதாகவும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஷாலு சத்தியபாபு தாயார் லைசாவை (60) நேற்று கைதுசெய்தனர். இதற்கிடையில் மந்திரவாதி அப்துல் ஜப்பார் (45), இவர் உதவியாளர் சித்திக் (36), கணவர் ஷாலு சத்தியபாபு (36), சாலு சத்தியபாபு சகோதரி சுருதி (29) ஆகிய 4 பேர் தலைமறைவாக இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |