Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிரூபிக்க வேண்டும்… இல்லைனா மானநஷ்ட வழக்கு தொடரப்படும்… எம் .பி க்கு அமைச்சர் எச்சரிக்கை…!!

 மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்த குற்றச்சாட்டுகளை நாமக்கல் எம்.பி நிரூபிக்கவில்லை எனில் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் தங்கமணி எச்சரித்தார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஜனதாநகர் , ஆவாரங்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்த 715 குடும்பங்கள்  தங்குவதற்கு நில ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 338 குடும்பங்களுக்கு மண்கரடு பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை 338 குடும்பங்கள் குடியிருப்பதற்கு ஏற்றார்போல் சமன் செய்து   இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மண்கரட்டில் நடைபெற்றது.

338 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்சார துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார் . பின்னர் அவர் செய்தியாளர்களிடம் நாமக்கல் எம். பி  மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் குறித்து சுய விளம்பரத்திற்காக பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகிறார் என்றும், குற்றச்சாட்டுகளை அவர்  நிரூபிக்கவில்லை எனில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் கோவை அடுக்குமாடி குடியிருப்பு திமுக ஆட்சியில்  தரமற்று கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். , விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என்றும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்  செயல்படாது என்றும் உறுதியளித்தார். விவசாயத்துக்கான மும்முனை  இணைப்பு  நேரம் சூரிய ஒளி மின்சார நேரத்தை கணக்கிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

Categories

Tech |