Categories
மாநில செய்திகள்

“நியாய விலை கடை பணிகளுக்கு முறையான தேர்வு நடத்த வேண்டும்”..? உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்…!!!!!!

நியாய விலை கடை பணியிடங்கள் நிரப்புவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோமல் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டின் வேளாண் கூட்டுறவு வங்கியின்  கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்  பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பல  மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக அனிதா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து  விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வி  தகுதியுடையோர்  உள்ளனர். ஆனால் தகுதியை பெறாத இவர்  எந்த தேர்வு நடைமுறையும் பின்பற்றப்படாமஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் 5 லட்சம் கொடுத்து இந்த பணியை வாங்கியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்  கூட்டுறவுத்  துறை அதிகாரிகள் அனிதா என்ற பெயரில் எந்த விற்பனையாளரும் பணியாற்றவில்லை எனக் கூறியுள்ளார். எனவே நியாய விலை கடைகளில் விற்பனையாளர்களை முறையான தேர்வு நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க உத்தரவிட வேண்டும். மேலும் அனிதாவை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும்” என அந்த மனுவில்  கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |