புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 14ம் தேதி வரை கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கொசு வலை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தொடர்ந்து, மழையால் சென்னை மக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.