லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்கால் பகுதியில் வினேஷ், துரைசிங் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை அறுவடை செய்வதற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரைசூர் மாவட்டத்தை சேர்ந்த எமனூரப்பா மற்றும் ஹனுமேஷ் ஆகியோரின் வண்டியை வரவழைத்தனர். இவர்கள் மணக்கால் கிராமத்தில் 45 நாட்களாக தங்கி அறுவடை பணியை செய்து வந்துள்ளர்னர்.
இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி எமனூரப்பா அறுவடை இயந்திரம் ஏற்றி வந்த லாரியை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். அப்போது திடிரென லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த ஹனுமேஷ் மீது லாரி பலமாக மோதியது . இதில் படுகாயமடைந்த ஹனுமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஹனுமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரியை ஓட்டிய எமனூரப்பாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.